கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முயற்சி! - சுனில் ஹந்துன்நெத்தி
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் முழு உரிமையையும் பெற்றமைக்கான பெருமையை தம்வசப்படுத்தி கொள்ளும் வெட்கமில்லாத முயற்சியில் அரசாங்கத்தின் சில பிரிவுகள் ஈடுபட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாரிய போராட்டம் காரணமாகவே ஒரு இந்திய நிறுவனத்திடம் வழங்கப்படவிருந்த 49 வீத பங்குகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டது.
எனினும் இதனை அரசாங்கத்தின் வெற்றி என்று சிலர் கூறிவருகின்றனர். தொழிற்சங்கங்களே கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய முனைவது போன்றும் அரசாங்கம் அதனை மீட்டது போன்ற தோரணையில் சிலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது வெட்கக்கேடான செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
