உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி உள்ளிட்ட தரப்புக்கு உயர் நீதிமன்றம் காலக்கெடு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல்களுக்காக நட்டஈடாக வழங்கப்படவுள்ள மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பணத்தை செலுத்தாவிட்டால், அந்த நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற குழு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
எஞ்சிய தொகையை செலுத்த ஆறு வருட கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
