மைத்திரியின் குற்றச்சாட்டுக்களுக்கு கர்தினால் பதில்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்(Maithripala Sirisena) குற்றச்சாட்டுக்களுக்கு கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை(Cardinal Malcolm Ranjith) பதிலளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கிடைக்கப் பெற்ற நன்கொடைகள் தொடர்பான சகல தகவல்களும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மைத்திரிக்கு குரோத உணர்வு
மைத்திரியின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குரோத உணர்வுடன் மைத்திரி கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொது வெளியில் கருத்து வெளியிடுவதற்கு முன்னதாக இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் மைத்திரி கேட்டறிந்து கொண்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சுமார் 500 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் திரட்டப்பட்டதாகவும் அனைத்து தகவல்களும் தம்மிடம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணத்தில் சுமார் 460 மில்லியன் ரூபா பணம் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
