“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்” ஹேமசிறி, பூஜித் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபர் மனு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களில் இருந்து காவல்துறையின் முன்னாள் அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீட்டை செய்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க போதிய புலனாய்வு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலேயே அவர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறி ட்ரயல் அட் பார் நீதிமன்ற அமர்வினால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டமை, தவறானது என்று தமது மேன்முறையீட்டில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். எனவே அந்த தீர்ப்பை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.





கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
