ஆறு வருடங்களின் பின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் திருப்பாடுகளின் காட்சி
ஆறு வருடங்களின் பின்னர் உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தயாரித்து வழங்கும் செக்கச்சிவந்த இரத்தம் எனும் சடங்கு நிலை ஆற்றுகை இடம்பெற்றது.
இந்நிகழ்வு, நேற்று (20.04.2025) 5:30 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்களால் திருப்ப காடுகளின் காட்சி பல்வேறு தலைப்புக்களின் கீழ் ஆற்றுகை செய்பட்டு வந்தது.
இடைநிறுத்தம்
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட குண்டுவெடிப்பு, கோவிட் காரணங்களின் நிமித்தம் ஆற்றுகை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஏழு வருடங்கிளின் பின்னர் செக்கச்சிவந்த இரத்தம் எனும் தலைப்பில் நாடகத்துறை ஆசிரியரும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிரதி அதிபரும் நெறியாளருமான ஏ.சி.பிரான்சிஸின் நெறியாளர் கையில் அரங்கேறியது.
தொடர்ந்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களால் ஈஸ்டர் பஜனை மற்றும் நடன நிகழ்வுகளும் அரங்கேறின.
அதேவேளை கடந்த 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரை கல்லூரியின் மாணவனாக குறித்த ஆற்றுகையில் கைப்பாஸ், பரபாஸ், பிலாத்து என பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த கலைஞன் தங்காராஜா சுபாஸ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொலிஸ் கடமையில் ஈடுபட்டிருந்த பொழுது உயிர்நீத்து இருந்தார்.
குறித்த கலைஞரும் இதன் பொழுது நினைவு கூரப்பட்டார். இதன் பொழுது கல்லூரியின் அதிபர் ருஷிரா குல சிங்கம்,உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்தை அசால்ட்டாக வெறும் கையில் தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது? Manithan

தனது திருமணம் முடிந்த கையோடு நட்சத்திர ஜோடியின் திருமணத்திற்கு சென்ற பிரியங்கா.. புகைப்படம் இதோ.. Cineulagam
