உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் 24 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேருக்கு, இன்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் 2021 நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகும்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 25 பிரதிவாதிகளுக்கு இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பி இருந்தது.
இலங்கையில் 2019 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரிக்க கடந்த மாதம் சிறப்பு மூன்று பேர் கொண்ட, ட்ரையல் அட் பார் நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டது.
வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 270 பேர் கொல்லப்பட்ட இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக நீதிபதிகள் தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோரை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக நௌபர் மௌலவி, சாஜித் மௌலவி, முகமது மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பை, முகமது சனாஸ்டீன் மற்றும் முகமது ரிஸ்வான் உட்பட 25 சந்தேகநபர்கள் மீது 23,270 குற்றச்சாட்டுகளை பொலிஸார் முன்வைத்துள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட, இந்த குற்றச்சாட்டுகளில் கொலைக்கு சதி செய்தல், உதவி செய்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்தல் மற்றும் கொலை முயற்சி ஆகியவை அடங்கும்.
ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த ஒன்பது தற்கொலைதாரிகள் இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் பல விடுதிகள் மீது, 2019இல் தொடர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டனர், இதில் 270 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் ஐஜிபி பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீது சட்டத்தரணி திணைக்களம் ஏற்கனவே இரண்டு தனித்தனியான வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
இதேவேளை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
