பெரும் சாபத்திற்கு உள்ளாகியுள்ள இலங்கை! பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆதங்கம்
இலங்கை ஒரு பெரும் சாபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் திருப்பலியொன்று ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்னும் நீதி கிடைக்காத காரணத்தினால் இந்த நாடு பெரும் சாபத்திற்கு உள்ளாகியுள்ளது. நம் நாட்டில் என்றும் இல்லாதவாறு பல அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நாட்டில் சநதோஷமாய் வாழ்ந்த நிறைய பேருடைய வாழ்க்கை இன்று இருளாக்கப்பட்டுள்ளது. அநேகமானோருக்கு அன்றாடம் உழைத்து சாப்பிட முடியாத நிலை உருவாகியுள்ளது.
இலங்கை ஒரு பெரும் சாபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நாட்டை ஆள்பவர்களுக்கு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத அளவுக்கு சாபமாகியுள்ளது.
பிறர் எப்படி போனாலும் பரவாயில்லை நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று தன்னலமாக நினைக்கும் ஒரு சமூகம் உருவாகியுள்ளது. நாட்டு மக்கள் இன்று பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள்.
இதுதான் சுபீட்சம், இதுதான் ஆசியாவின் ஆச்சர்யம்.
எமது ஆட்சியாளர்களுக்கு இது ஏன் விளங்காமல் உள்ளது? அவர்கள் குருடர்களா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
