இலங்கையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த ஈஸ்டர் தாக்குதல்: சுரேஷ் சலேயைக் காப்பாற்ற துடிக்கும் அரசியல்வாதிகள்
2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஒட்டுமொத்த இலங்கையையும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த அந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு நடந்து பல வருடங்கள் கடந்துவிட்டன.
அன்று தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் சிதறிப்போனது வெறும் மனித உடல்கள் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான குடும்பங்களின் நிம்மதியும், ஒட்டுமொத்த நாட்டின் அமைதியும்தான்.
ஒரு ஆட்சி மாற்றத்திற்காக, அதிகார நாற்காலியைக் கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட மிகப் பெரிய சதித்திட்டம் இது என்ற உண்மைகள் இப்போது மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான இறுதி கட்டத்தை நோக்கி தற்போதைய அரசாங்கம் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.
ஆனால், உண்மை வெளிவந்துவிடுமோ என்ற பயத்தில், சில அரசியல்வாதிகள் இந்த விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடத் தொடங்கியுள்ளனர்.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற எதிர்க்கட்சியினர் ஏன் இந்த விசாரணைகளைக் கண்டு பதறுகிறார்கள்? சிறைக்குள் இருக்கும் சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக இவர்கள் குதிப்பதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?
இந்த விடயங்களை பற்றி பேசுகின்றது கீழ்வரும் காணொளி...