உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியான தீர்ப்பினை பெற்றுக் கொடுப்போம்: ஜெகதீஸ்வரன் எம்பி
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியான தீர்ப்பினை சட்ட ரீதியான விசாரணை மூலமாக எமது காலப் பகுதியல் பெற்றுக் கொடுப்போம்.இதில் பலரது முகமூடிகள் கிழித்தெறியப்படும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்திற்குட்பட்ட குருக்கள்புதுக்குளம் கிராமத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடி
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போது வவுனியா மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக உரத்திற்கான அதிகமான விலை காரணமாகவும், அவற்றினை பெற்றுக்கொள்வதிலும் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையிட்டு உரத்தினை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எதிர்காலத்தில் கமநல சேவை நிலையங்களின் ஊடாக விவசாயிகளிற்கு உரத்தினை வழங்குவதற்குரிய செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம்.

அந்தவகையில் இறக்குமதி செய்யப்படும் 68 வீதமான உரத்தினை நியாயமான விலையில் விவசாயிகளிற்கு வழங்குவதன் ஊடாக மோசடியான விலையேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியினை எவ்வாறு மக்கள் முகம்கொடுப்பது என்பது தொடர்பாக மக்களினை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமானது நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்
அந்தவகையில் செட்டிக்குளம் பிரதேசத்திற்குட்பட்ட கிராமங்கள் தோறும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். தற்போது சமகாலத்தில் உதய கம்பன்பிலவின் புத்தக வெளியீடானது மிகவும் பேசு பொருளாக காணப்படுகின்றது. திருடர்கள் அனைவரும் ஒன்று கூடியது தொடர்பாக கருத்து கூறவேன்டிய தேவை உள்ளது.
குறித்த புத்தக வெளியீட்டிற்கு சென்றவர்கள் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் காலத்தில் அமைச்சர்களாகவும், ஜனாதிபதிகளாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்தவர்களே அங்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த புத்தக வெளியீடானது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று வெளிவந்துள்ளது. குறிப்பாக ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூட்சுமங்களை மறைக்கின்ற அடிப்படையில் உதயகம்பன்பிலவின் புத்தக வெளியீடு காணப்படுகின்றது.
குறிப்பாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அரசாங்கம் உறுதியாக இருப்பதுடன் அதற்குரிய விசாரணைகள் முழுமையாக இடம்பெறும்.
அத்தோடு ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அத்தோடு எமது காலத்தில் அவர்களிற்கான தண்டனையும் சட்டத்தின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும்.
அத்தோடு இங்கு ஒன்று கூடியவர்கள் அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை மற்றும் சரியானவர்களை இணங்கானவில்லை என்று கருத்து கூறுகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
குறிப்பாக அவர்களுடைய காலத்தில் இதற்குரிய விசாரணைகளை முழுமையாக நடத்தி இதில் குற்றம் புரிந்தவர்களிற்கான தண்டனையை பெற்றுக்கொடுக்கவில்லை. இதன் மூலமாக யார் குறித்த பிரச்சனையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று மக்களிற்கு தெளிவாக தெரிகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் வட பகுதி மக்கள் சஜித் பிரேமதாசாவின் மீது நம்பிக்கை வைத்து கூடுதலான வாக்கினை வழங்கியிருந்தனர். ஆனால் தற்போது அவர் தமிழ் மக்களிற்கு பல்வேறு அநீதியினை இழைத்த ராஜபக்சக்கவுடன் சேர்ந்து இருக்கின்றார்.
குறிப்பாக ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களுடன் இணைந்ததன் விளைவாகவே படுதோல்வியினை சந்தித்திருந்தார்.
குறித்த பாடத்தினை கூட சஜித் பிரேமதாசா கற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் அவர்களுடன் கூட்டு சேர்நது தனது அரசியல் வாழ்வை அஸ்தமிக்க கூடிய வகையிலான செயற்பாட்டிலே ஈடுபட்டு வருகின்றார்.
எதிர்காலத்தில் மக்கள் அவர் தலைமை தாங்குகின்ற கட்சிக்கு இடமளிக்காத வகையில் தீர்ப்பினை வழங்குவார்கள். அதுமட்டுமல்லாமல் இனவாதம் பேசுகின்ற மொழி சார்ந்த இனம்சாரந்த கட்சிகள் கூட குறித்த புத்தக வெளியீட்டில் பங்குபற்றியுள்ளனர்.
இதன் மூலமாக ஈஸ்டர் குண்டுதாக்குதலிற்கான நியாயங்களினை வழங்குவதை தடுப்பதற்கான செயற்பாடே இதன் ஊடாக காணப்படுகின்றது.
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு நீதியான தீர்ப்பினை சட்ட ரீதியான விசாரணை மூலமாக எமது காலப்பகுதியல் பெற்றுக்கொடுப்போம். இதில் பலரது முகமூடிகள் கிழித்தெறியப்படும்.
பொறுப்புள்ள அரசாங்கம்
போலி முகமூகங்ளுடன் உலாவரும் பல அரசியல் பிரமுகர்களை இதன் ஊடாக மக்களிற்கு வெளிப்படுத்தப்படுவர். ஏஐ தொழில்நுட்பத்திற்கும் நேரடியாக குறித்த வெளியீட்டில் கலந்து கொண்டமைக்குமான வித்தியாசம் சஜித் பிரேமதாசாவிற்கும், அவருடைய கட்சியினருக்கும் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் எங்களிற்கும் மக்களிற்கும் நன்றாக தெரியும்.
இது தொடர்பாக போலியான கருத்துக்களை கூறி மறைக்கலாம் என எண்ணுகின்றனர். ஆனால் அதற்கான சந்தர்ப்பமே கிடையாது. ஏன்எனில் அவர்களிற்கு பயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக புத்தக வெளியீட்டில் இவர்களுடன் இணைந்து கலந்து கொண்டமை பிழையான விடயம் என்பதை மக்கள் கூறத்தொடங்கியுள்ளனர்.
அதில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறான போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏன்ற போதிலும் இவ்வாறான போலியான பிரச்சாரங்களிற்கு மக்கள் சந்தர்ப்பம் வழங்க மாட்டார்கள். எனவே மக்களை தெடர்ந்து ஏமாற்றலாம் என இவர்கள் கனவு கண்டால் அது நிச்சயமாக பகல் கனவாகவே இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 11 மணி நேரம் முன்
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam