உயிர்த்தஞாயிறு தாக்குதல்களில் தனது சகோதரங்களை இழந்த வெளிநாட்டவர் இலங்கை வருகை! வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது சகோதரங்களை இழந்த டேவிட் லின்சே என்பவர் இலங்கையில் உதட்டுபிளவு சத்திரகிசிச்சைகளிற்கு உதவுவதற்கு முன்வந்துள்ளார்.
அமெலி டானியல் லின்சே மன்றத்தை அமைத்துள்ள டேவிட்லின்சே இலங்கையில் உதட்டுபிளவு கிசிச்சைகளை முன்னெடுப்பதற்காக நிபுணர்களுடன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
உதட்டுப்பிளவு சிகிச்சை
இந்த குழுவினர் காலியில் இடம்பெறும் உதட்டுப்பிளவு மாநாடொன்றில் கலந்துகொள்ளவுள்ளனர்.
பின்னர் நுவரேலியாவில் உதட்டுப்பிளவு சிகிச்சை தொடர்பில் சத்திரகிசிச்சை நிபுணர்களிற்கு உதவ உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அறக்கட்டளை
டேவிட் லின்சே சுகாதார இராஜாங்க அமைச்சரை சந்திக்கவுள்ளார்.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் போது உயிரிழந்த தனது சகோதரர்கள் அமெலி மற்றும் லின்சேயின் நினைவாக அமைப்பொன்றை டேவிட் உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.