உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை தொடர்பில் உறுதி மொழியை மீறிய ரணில்: வெளியான தகவல்

Ranil Wickremesinghe Easter Attack Sri Lanka
By Sivaa Mayuri Aug 19, 2022 08:05 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம், இதுவரை பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளிடம் உதவியை நாடவில்லை என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவுடன் மேற்கொள்ள முடியும் என நம்புவதாக அப்போதைய பிரதமரும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

இந்நிலையில், இலங்கை அரசாங்கம், இதுவரை பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளிடம் அத்தகைய உதவியை நாடவில்லை. அவர் இந்த கருத்தை நாடாளுமன்றில் கூறி இப்போது ஒரு மாதம் கடந்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் ஆர்வம் காட்டினால், உத்தியோகபூர்வ கோரிக்கையை பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளிடம் விடுக்க வேண்டும்.

கோரிக்கையை முன்வைக்கும் முக்கிய நிறுவனங்கள்

எனினும் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கும் அதிகாரங்களை கொண்ட, முக்கிய நிறுவனங்களான ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, அல்லது பொது பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

அத்துடன் தனக்கு தெரிந்த வகையில், அது தொடர்பில் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இவ்வாறான கோரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், இந்த முனைப்பு இராஜதந்திர மட்டத்தில் இது செய்யப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து கடந்த ஜூலை 18ஆம் திகதி பதில் ஜனாதிபதியாக பதவி வகித்து அறிக்கை வெளியிட்ட விக்ரமசிங்க, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை நிறைவு செய்வதற்கு பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளின் உதவியைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இனியும் தாமதிக்காமல் இந்த விஷயத்தை இறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கத்தோலிக்க திருச்சபை வெளியிட்ட கருத்து 

Easter Attack Sri Lanka

எனினும் , ரணில் விக்ரமசிங்க இந்த அறிக்கையை விடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, கத்தோலிக்க திருச்சபை, தமது கருத்தை வெளியிட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் இறந்த மக்களின் "இரத்தத்திலும் சதையிலும்" மற்றும் "துக்கத்திலும் கண்ணீரிலும்" ஜனாதிபதி அதிகாரத்தைப் பெற, ரணில் முயற்சிக்கிறார் என்று திருச்சபை குற்றம் சுமத்தியிருந்தது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது விக்ரமசிங்க பிரதமராக இருந்ததாகவும், பிரித்தானியா காவல்துறை அதிகாரிகளின் மூலம் சுதந்திரமான விசாரணை நடத்த, அவருக்கு போதிய நேரமும் வாய்ப்பும் இருந்ததை திருச்சபை நினைவு கூர்ந்திருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்

Easter Attack Sri Lanka

2019, 21 ஏப்ரல் அன்று, மூன்று தேவாலயங்கள் (கடுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மற்றும் மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம்) மற்றும் கொழும்பில் மூன்று சொகுசு ஹோட்டல்கள் (சினமன் கிராண்ட், தி கிங்ஸ்பரி மற்றும் தி. ஷங்ரி-லா) தொடர்ச்சியான ஒருங்கிணைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகின.

அத்துடன் அன்று, தெமட்டகொடையில் உள்ள ஒரு வீடு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்குமிடம் ஆகியவற்றில் மேலும் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. இந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 267 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 500 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல்களில் ஈடுபட்ட எட்டு தற்கொலை குண்டுதாரிகளும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள், ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹாஷிம் என்ற மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரானால் நிறுவப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பில் தொடர்புடையவர்களாவர்.

கோட்டாபயவிடம் எந்த நிபந்தனையும் இன்றி பதவியை வாங்கிய ரணில்! முக்கிய தகவல்களை வெளியிட்ட சனத் நிஷாந்த 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US