உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சர்வதேச விசாரணை தொடர்பில் ரணில் எடுத்த நடவடிக்கை - நீதி அமைச்சரின் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணகைளை முன்னெடுக்க தயார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள போதும் ஒரு தரப்பினர் அதற்கு சாதகமான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் முரண்பட்டுக் கொண்டால் ஒருபோதும் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாது. குண்டுத்தாக்குதலினால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடுமையாக விமர்சிக்கப்பட்டேன்..
குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் நான் ஒரு தரப்பினரால் இனவாதியாகவும், இரத்தத்தை காண்பதற்கு ஆசை கொண்டுள்ள நபர் என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது நீதியமைச்சர் பதவியில் இருந்துக் கொண்டு அடிப்படைவாதம் தொடர்பில் நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றினேன். அதன் பின்னர் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். எமது அரசாங்கத்தின் உறுப்பினர்களே என்னை விமர்சித்தார்கள். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மாத்திரமே சிறந்த முறையில் செயற்பட்டார்.
நீதியமைச்சர் குறிப்பிட்ட விடயத்தை அலட்சியப்படுத்த கூடாது. உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் மாத்திரமே நடுநிலையுடன் கருத்து தெரிவித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் அப்போது எடுக்கப்படவில்லை. என்னை விமர்சிப்பதை மாத்திரமே இலக்காக கொண்டு அப்போதைய அரசாங்கம் செயற்பட்டது.
இறுதியில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது. குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுக்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
ஆனால் அதற்கு உரிய தரப்பினர் சாதகமான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.ஆகவே குண்டுத்தாக்குதல் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் பிரச்சினையில்லை.
அன்று தடுக்க கூடிய அழிவை தடுக்காத காரணத்தால் தான் பலர் உயிரிழந்தார்கள். ஆகவே இவ்விடயத்தில் நாடாளுமன்றம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
