தேசபந்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்பா..
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும், பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புபட்டிருக்கலாம் என்று சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார(Manoj Nanayakara) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசபந்துவின் சாதனை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தேசபந்து தென்னகோன் பல சாட்சிகளை மூடி மறைத்துள்ளார். அவருக்கு உடந்தையாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இருந்துள்ளார்.
தேசபந்து பல சாதனைகளை கொண்டவர். பதவியில் இருக்கும் போது சிறையில் அடைக்கப்பட்டார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல பொலிஸ் மா அதிபராக இருக்கும் போதே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவை அனைத்தும் அவரது சாதனைகளாகும்.
தேசபந்துவின் பதவி நியமனமே தவறானது. இதனை உச்ச நீதிமன்றமே அறிவித்துள்ளது.
இனைத் தவிர முக்கியமான விடயம், இவர் நேரடியாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம். அதற்கு பல சாட்சியங்கள் உள்ளன.
பாணந்துறை களனிகம அதிவேக பாதையின் நுழைவாயிலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டபோது, அதனைக் கொண்டுச் சென்ற வாகனத்தினை வெளியேற்றுமாறு தேசபந்து தொலைபேசியின் மூலம் அறிவித்துள்ளார்.
அதனை அப்போது கடமையில் இருந்த அதிகாரி குறிப்பு புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். எனவே தேசபந்துவுக்கு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் நேரடியான தொடர்பிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.