உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இதுவரை வெளியாகாத 8 விடயங்களை பகிரங்கப்படுத்திய அருட்தந்தை
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிவராத 8 தகவல்களை தாம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் குறிப்பிட்டதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ(FR.Siril Gamini Fernando) தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ நேற்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணை
இது தொடர்பில், கொழும்பு பேராயரின் இல்லத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செயற்படும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இல்லை என குறிப்பிடவில்லை. மாறாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரை உரிய முறையில் சேவையாற்றுவதற்கு இடமளிக்கவில்லை என தோன்றுகிறது.

அதேநேரம், சவால்மிக்க கேள்விகள் எவையும் நேற்று என்னிடம் கேட்கப்படவில்லை. தற்போது வெளியாகாத பல தகவல்கள் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டன.
அதேநேரம் முன்னதாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி ஒன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுமாயின் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் உள்ள சகல தரப்பினர் தொடர்பான தகவல்களும் வெளியாகும் என என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri