குண்டுதாரிகளை கைது செய்ய ரணில் எடுத்த நடவடிக்கை: அதற்குள் நேர்ந்த அசம்பாவிதம்
ரணில் விக்ரமசிங்க பிரதமர் காரியாலயத்துக்கு அனைத்து அதிகாரிகளையும் அழைத்து கலந்துரையாடி எஞ்சிய குண்டுதாரிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தபோது குண்டுதாரிகள் அனைவரும் குண்டை வெடிக்கவைத்துக்கொண்டனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஐ.எஸ். அமைப்பில் பயிற்சிபெற்றவர்கள் நாட்டுக்குள் இருப்பதாக நான் தெரிவித்ததாக இந்த சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்திருந்தனர். அவ்வாறானதொரு விடயத்தை நான் தெரிவிக்கவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
20 நிமிடம் வரை காத்திருந்த ரணில்
அத்துடன் ஈஸ்டர் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பின்னர் பாதுகாப்பு சபையில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 20 நிமிடங்கள்வரை வெளியில் அறை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
அப்போது நானும் அவருடன் சென்றிருந்தேன். பிரதமர் அங்கு வந்திருப்பதை அறிந்த பாதுகாப்பு தரப்பின் சிலர் அங்கு வந்து, சிறிது நேரம் இருக்குமாறு தெரிவித்திருந்தனர்.
அப்போது பாதுகாப்பு சபை கூட்டத்தில் முப்படைகளின் தளபதி, பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பல அதிகாரிகள் இருந்தனர்.
ஆனால் அரசியல்வாதிகள் யாரும் இருக்கவில்லை. பின்னர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் காரியாலயத்துக்கு அனைத்து அதிகாரிகளையும் அழைத்து கலந்துரையாடி எஞ்சிய குண்டுதாரிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தபோது குண்டுதாரிகள் அனைவரும் குண்டை வெடிக்கவைத்துக்கொண்டனர்.
அத்துடன் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பல விடயங்களை தெரிவித்திருந்தார்.
இந்த விடயங்களை அவர் விரும்பினால் மேல் நீதிமன்ற மூன்றுபேர் கொண்டு விசாரணைக்குழுவுக்கு வழங்க முடியும். அவ்வாறு வழங்கினால் அந்த விடயங்கள் விசாரணைக்கு முக்கியமாக இருக்கும்.
அத்துடன் புலனாய்வு பிரிவு தொடர்பாக அரசியல்வாதிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஒருசில அரசியல்வாதிகளின் பேச்சுக்களை பார்க்கும் பயங்கரவாதிகளும் உலகத்தாரும் சிரிக்கிறார்கள்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்தை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. ஏனெனில் நாங்கள் இதுதொடர்பாக விவாதித்து பிளவுபட்டுக்கொள்வதன் அழிவடையப்போவது இந்த தேசியமாகும் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
