சஹ்ரான் தொடர்பான காணொளிகள் எப்படி கசிந்தன : நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்ட தகவல்
ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் பற்றிய சில காணொளிகள் எப்படி கசிந்தன என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் டிரான் அலஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
இதேவேளை, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்காத சில அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்த பொலிஸ் அதிகாரியும் குற்றவாளிகளாக குறிப்பிடப்படவில்லை. அவர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் மாத்திரமே அதில் முன்வைக்கப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பில் சட்டமா அதிபரே தீர்மானம் எடுத்துள்ளார். அத்துடன், தாக்குதல்களுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொறுப்புகூறவேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
உயர்நீதிமன்றமே அவரை குற்றவாளியென கண்டறிந்து, இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri