இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோழி இறைச்சியின் விலை குறைப்பு
புதிய இணைப்பு
கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, 100 ரூபாவால் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கோழி இறைச்சியின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம்(21.09.2023) இடம்பெறவுள்ளது.
தீர்மானம் இன்று
இந்த நிலையில், இன்றைய கலந்துரையாடலின் பின்னர் விலை குறைப்பு தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் அதன் விலை 200 ரூபாவினால் விலை குறைக்கப்பட வேண்டுமெனவும் வர்த்தக அமைச்சர் கூறினார்.
இன்றைய கலந்துரையாடலின் போது கோழி இறைச்சியின் விலையை 200 ரூபாவினால் குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் இணங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இல்லாவிடின் கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
