உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்கும் ஜனாதிபதி
உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் புதிய விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இங்கிலாந்தின் உளவு அமைப்பின் உதவியுடன் புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
ஜனாதிபதியின் முயற்சிகள்
அதன் அடிப்படையில் தற்போது இராஜதந்திர வழிகளின் ஊடாக அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரமளவில் இங்கிலாந்தின் உளவுத்துறை மற்றும் ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸ் என்பவற்றுக்கு உத்தியோகபூர்வமான வழியில் அதற்கான கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முழுமையான புதிய விசாரணையொன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை |