உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: அரசாங்கத்தை கடுமையாக சாடும் நாமல் - செய்திகளின் தொகுப்பு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குருடாகவும் செவிடாகவும் செயற்படுவதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் நேற்று (18) தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை வெளியீடு கட்டுப்பாட்டை மீறியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கையில் விடுபட்ட பக்கங்கள் இன்னும் இருப்பதாக ஒரு கருத்து நிலவி வரும் நிலையில், அரசாங்கம் அதனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
அரசாங்கம் அறிக்கைகளை வெளியிடுவதில் குருடாகவும் செவிடாகவும் செயல்படுகிறது.வெறும் பேச்சு மாத்திரமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சந்தேகங்கள் நிறைந்திருக்கும் விடயங்களில் அரசாங்கம் பதில் சொல்வது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri