உதய கம்மன்பில வெளியிட்ட நூலில் அடங்கியுள்ள நான்கு முக்கிய விடயங்கள்
சட்டத்தரணி உதய கம்மன்பில எழுதி வெளியிட்டுள்ள 'ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தேடிய பயணம்' என்ற நூலில் நான்கு முக்கிய கேள்விகளுக்கு பதிலை தேடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
நான்கு முக்கிய கேள்விகள்
1.கோட்டபாய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தி கொள்வதற்காக ஈஸ்டர் தாக்குதல் போன்ற ஒரு தாக்குதலுக்கான அரசியல் தேவைப்பாடு இருந்ததா?
2.ஈஸ்டர் தாக்குதல் இராணுப் புலனாய்வு பிரிவால் மேற்கொள்ளப்பட்டதாகும் என சூழ்ச்சிகள் செய்வதற்கான நியாயமான சாட்சிகள் இருக்கிறதா?
3.சஹ்ரான் உள்ளிட்ட குழுவினருக்கு கோட்டபாய ராஜபக்சவுக்காக உயிரை மாய்த்து கொள்வதற்காக நியாயமான காரணங்கள் இருக்கிறதா?
4.இராணுப் புலனாய்வு பிரிவால் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது என பிரசாரம் செய்வதற்கான உள் நோக்கம் என்ன?
இவ்வாறான நான்கு கேள்விகளுக்கு தான் எழுதியுள்ள நூலில் காரண காரியங்களுடன் விளக்கம் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு! மறுஅறிவித்தல் வரை எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ Cineulagam