பிள்ளையான் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க முடியாது: ஹரீஸ் எம்.பி ஆவேசம்
போலியான கருத்துக்களை வெளியிட்டு பிள்ளையான் போன்றவர்கள் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் செயலாளராக இருந்த அசாத் மௌலானா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்தினால் மக்கள் பல்வேறு சந்தேகங்களுடன் இப்போது இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
அம்பாறை - கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (11.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு! உறவினர்களை கடத்திய TMVP (VIDEO)
சுயநலத்திற்கான குற்றச்சாட்டு
அங்கு கருத்து தெரிவித்த அவர்,
''சஹ்ரானின் சகோதரருடன் தொடர்புள்ள பிள்ளையான் தன்னை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் சமூகத்தை மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துவதை நிறுத்த வேண்டும்.
சஹ்ரானின் சகோதரருடன் தொடர்புள்ளதை பல இடங்களில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ள நிலையில் அவர் தன்னை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து மீண்டும் மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துவதை நிறுத்த வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தற்போது முஸ்லிம் மக்கள் மீது சிலர் சுயநலத்திற்காக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது எம்மால் ஏற்க முடியாது.
நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆட்சி மாற்றத்தை இலக்குவைத்து நடத்தப்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.'' என தெரிவித்துள்ளார்.