கிழக்கு முனைய விவகாரம்! இலங்கைக்கு சீனா அழுத்தம் கொடுத்ததா?
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் சீனா இலங்கைக்கு அழுத்தங்கள் எதனையும் கொடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய திட்டம் தொடர்பாக சீனாவிடம் இருந்து எந்த அழுத்தத்தையும் இலங்கை எதிர்கொள்ளவில்லை என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
"சீனா எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அவர்கள் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட மாட்டார்கள். அது மட்டுமல்லாமல், இந்தோ-லங்கா உறவில் சீனா தலையிடாது.
இவை அடிப்படையான உண்மைகள் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் 2019ம் ஆண்டு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டிருந்தன.
இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை தொடர்ந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதில்லை என அண்மையில் இலங்கை அரசு அறிவித்தது.
“நாங்கள் இந்த முடிவை அவர்களுக்கு முறையாக தெரிவிக்கவில்லை என்று இந்திய உயர் ஸ்தானிகர் அதிருப்தி தெரிவித்தார்.
எங்கள் முடிவில் இந்தியா மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் என்னிடம் கூறினார் என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எங்கள் கண்ணோட்டத்தை உயர் ஸ்தானிகருக்கு விளக்கினேன்,
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை மனதில் கொண்டு இதைக் காணுமாறு இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்தேன்" என்று குணவர்தன தெரிவித்துள்ளார்.





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 17 மணி நேரம் முன்

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri
