சுற்றுலாத்துறையை விருத்தி செய்ய கிழக்கில் விசேட வேலைத்திட்டம்
அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலா பாடசாலை ஒன்றை அமைக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கிழக்கு மாகாண உள்ளுராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறுகம்பே குடாவிற்கு தனது ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த போதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
பயிற்சி பெற்ற நட்சத்திர விருந்தகங்களுக்கான ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் அதிகரித்து வரும் தேவையை, உள்ளூரில் மட்டுமல்லாது, இலங்கை முழுவதும் இந்த திட்டம் மூலம் பூர்த்தி செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நாடளாவிய ரீதியில் சுற்றுலாத்துறை சார்ந்த 3000 பணி வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
கிழக்கு மாகாண சுற்றுலா
இதற்கான தீர்வை உடனடியாக பெற்று நாட்டின் சுற்றுலாத்துறையை சிறந்த நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், கிழக்கு மாகாணத்தை நாட்டின் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றியமைப்பதற்கான ஏற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அறுகம்பே குடாவில் கடல் விமானம் தரையிறங்கும் கப்பல்துறையை நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டை வழங்குமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்ததோடு, கடல் விமான(seaplane) நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |