கதவடைப்பில் வெற்றி கண்டதா தமிழரசுக் கட்சி.. அரசாங்கத்தின் நிலைப்பாடு
வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படும் கதவடைப்பானது வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்ததை அரசாங்கம் மறுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைக் கண்டித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று கதவடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் பல கடைகள் இன்று திறந்திருந்தன.
இருப்பினும், இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) ஏற்பாடு செய்திருந்த கதவடைப்பை ஒட்டி, இரண்டு மாகாணங்களிலும் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன.
மறுப்பு தெரிவிப்பு..
இந்நிலையில், கதவடைப்பில் வெற்றி பெற்றதாக தமிழ் அரசு கட்சி கூறியுள்ள அதே நேரத்தில் அரசாங்கம் அது தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்துள்ளது என ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
முல்லைத்தீவு - முத்தையான்கட்டு பகுதியில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரியும் அங்கு அமைக்கப்பட்டுள்ள இராணுவ பிரசன்னத்தை அகற்றுமாறு கோரியும் இந்த கதவடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
அதேவேளை, குறித்த இளைஞனின் மரணத்தில் இலங்கை இராணுவம் இதில் ஈடுபடவில்லை என்று அரசாங்கம் மறுத்துள்ள அதேவேளை, மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், இன்று காலை தொடங்கிய இந்த கதவடைப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA), இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC), தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் அடக்குமுறை நடத்தை மற்றும் அதிகப்படியான பிரசன்னம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைக்கு தமிழர் பகுதிகளில் மக்கள் பலர் ஆதரவு அளித்துள்ள அதேவேளை எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



