சீரற்ற காலநிலையால் கிழக்கில் அதிகம் பேர் பாதிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 18 மாவட்டங்களில் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அம்பாறை(Ampara), மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 17 ஆயிரத்து 952 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 878 பேர் பலத்த மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் 7970 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வடமத்திய மாகாணத்தில் 1,369 குடும்பங்களைச் சேர்ந்த 4599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 319 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
7 மாகாணங்களில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், 320 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிக மழை காரணமாக நாட்டிலுள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 35 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் நிரம்பி வழிகின்றன என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |