இஸ்லாமிய கடும்போக்கு அமைப்பினை மருத்துவர் வழிநடத்துவதாக குற்றச்சாட்டு
கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பு ஒன்றை அரச மருத்துவர் ஒருவர் வழிநடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இணையத்தில் யூடியுப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க வைத்தியசாலை
கல்முனை அரசாங்க வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றி வரும் மருத்துவர் ஒருவரே இந்த கடும்போக்குவாத அமைப்பிற்கு தலைமை தாங்குகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறைக் குழு தன் ஆதரவாளர்களுக்கு உலகம் எந்த வேலைக்கும் தகுதியற்றது, குழந்தைகள் கல்வி கற்கக் கூடாது, புத்தகங்களைப் படிக்க வேண்டாம் என போதிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களது வாழ்வை "தெய்வத்திற்காக" அர்ப்பணிக்க வேண்டும் எனவும் இந்தக் குழுவின் தலைவர் மக்களை வழிநடத்துவதாக தேரர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் தங்களது குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
