கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு தலைமை தாங்கியவர் கைது
கெஹல்பதர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகியோரின் நெருங்கிய உறவினரான யோஹான் அனுஷ்க ஜெயசிங்க என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபராக யோஹான் அனுஷ்க காணப்படுகிறார்.
இராணுவ கமாண்டோ படையில் இருந்து தலைமறைவான யோஹான், கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்ற தடுப்பு பிரிவு
குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் கடந்த 5 ஆம் திகதி கட்டுநாயக்க பகுதியில் நடத்திய சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவரது பிடியாணை மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பன்னல அலபலடகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இது தவிர, ஒரு வெடிமருந்து பை மற்றும் 6 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்பிரிவு பிரிவினர் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
