பெருவில் தொடருந்து மோதி உயிர் தப்பிய குடிமகன்
பெருவில் தொடருந்து தண்டவாளத்தில் உறங்கி க் கொண்டிருந்த ஒருவர் மீது, தொடருந்து ஓன்று மோதிச் சென்ற போதும், அவர் உயிர் தப்பியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெதுவாக நகரும் சரக்கு தொடருந்துஓன்று, அவரை மோதுவதற்கு முன்பு அவர் அசையாமல் கிடப்பதை கண்காணிப்பு கருவிக் காட்சிகள் காட்டுகின்றன.
எனினும் நடந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் சிறிது நேரத்திலேயே எழுந்து நிற்கிறார்.
தண்டவாளத்தில் உறங்கிய நிலை
இதன்போது அவர் போதையில் இருந்ததாகவும், தண்டவாளத்தில் உறங்கிய நிலையில், தொடருந்து வருவதை உணரவில்லை என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

குறிப்பிடத்தக்க வகையில், அந்த நபரின் இடது கையில் மாத்திரம் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன, இதனையடுத்து, அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காணொளி - https://tinyurl.com/9v8yn56r
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam