மஹிந்த கட்சிக்குள் பூகம்பம் - வெளியேறுகிறதா சுதந்திர கட்சி?
சமகால ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து விலகலாம். அவ்வாறு விலகினால் எந்த மாற்றமும் ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சுதந்திரக்கட்சியின் ஆதரவு எப்போதும் இருக்கவில்லை, ஜனாதிபதி தேர்தலில் மாத்திரமே எங்களிற்கு ஆதரவு கொடுத்தனர். அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியையே ஆதரித்தார்கள். இதுவே உண்மை கதை. ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த ஆதரவை அங்கீகரித்து மதிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சின்னத்தில் போட்டியிட்டதன் காரணமாகவே அவர்களிற்கு சில ஆசனங்கள் கிடைத்தன. இல்லாவிட்டால் அவர்களால் இரண்டு, மூன்று ஆசனங்களிற்கு மேல் வென்றிருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
தனிக்கட்சி என்ற வகையில் அவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் முடிவெடுக்கலாம், அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்திருக்கலாம் விரும்பினால் வெளியேறலாம். அதற்கு தடையேதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த கட்சியை சேர்ந்த சிறிய எண்ணிக்கையிலானவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளதால் அவர்கள் வெளியேறினாலும் அது அரசாங்கத்தின் கட்டமைப்பை பாதிக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
