மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்
மியான்மரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியான்மர் தலைநகர் நேபிடா அருகே, மதியம் 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 முறை மியான்மரில் நிலநடுக்கம்
மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
நேற்று மாத்திரம் 7 முறை மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி
இந்த நிலநடுக்கத்தில் மியான்மரில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், சுமார் 2 ஆயிரம் பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதற்கமைய அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |