பிரித்தானியாவில் ஆசிரியர்களை தாக்கிய மாணவர்கள்..! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
பிரித்தானியாவில் ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான முன்பள்ளி சிறுவர்கள் ஆசிரியர்கள் மீது நடத்திய உடல்ரீதியான தாக்குதல்களையடுத்து, முன்பள்ளி சிறுவர்கள் பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சிறுவர்களின் இந்த அடாவடித்தனமானது கொவிட் காலப்பகுதியில் இருந்து தொடர்ந்து வருவதாகவும், அக்காலப்பகுதியில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததே இதற்குக் காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோசமான மனநிலை
2022 - 2023ஆம் ஆண்டுகளில் மாத்திரம் 3500க்கு மேற்பட்ட சிறுவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மூத்தோர் மீது நடத்திய தாக்குதலை அடுத்தே பிரித்தானியாவில் முன் பள்ளிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் முன் பள்ளியில் ஏனைய சிறுவர்களை தாக்கியமைக்காக 1800க்கும் மேற்பட்ட சிறுவர்கள் முன்பள்ளிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
