மியன்மாரை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம்: ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
புதிய இணைப்பு
மியன்மாரில் நேற்று ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரையில் 1,002 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பூகம்பம் காரணமாக 2,376 பேர் காயமடைந்துள்ளதுடன் 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மூன்றாம் இணைப்பு
மியான்மரில் நேற்று (28) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 694 ஆக உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, 1,670 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு
மியன்மாரில் (Myanmar) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 144 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மாரின் மெண்டலே பகுதியில் 7.7 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம்
வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்தின் தொலைதூரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதேவேளை, தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் இன்று (28) வெள்ளிக்கிழமை 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அத்தோடு, தாய்லாந்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Post Office திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்து முதிர்ச்சியில் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம்? News Lankasri

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
