பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கமானது இன்று (2) அதிகாலை 2.58 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம்
பலுசிஸ்தானின் கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அத்தோடு, நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த எந்த தகவல்களும் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதேவேளை, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
