இலங்கையில் பதிவாகப்போகும் நிலநடுக்கங்கள் குறித்து வெளியான தகவல்
நாட்டில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் தனுஷ்க ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கை அமைந்துள்ள இந்திய - அவுஸ்திரேலிய தட்டுக்கும் மேலே அமைந்துள்ள ஆசிய தட்டுக்கும் இடையில் நேற்று பகல் முழுவதும் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த நிலநடுக்கங்கள் பற்றிய ஆய்வில் நாம் குறிப்பிடக்கூடிய காரணிதான் நேற்று நாள் பூராகவும் இலங்கை அமைந்துள்ள இந்திய - அவுஸ்திரேலிய தட்டு மற்றும் மேலே உள்ள ஆசிய தட்டுக்கு இடையே 4 - 5 ரிக்டர் அளவில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2, 2.5, 3, 3.5 போன்ற நிலநடுக்கங்கள் எதிர்காலத்திலும் நடக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
