நேபாளத்தில் தொடரும் நிலநடுக்கங்கள்...! 100க்கும் மேற்பட்டோர் பலி: அதிகரிக்கும் உயிரிழப்புகள்
நேபாளத்தில் இன்று (05.11.2023) அதிகாலை 4.38 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது காத்மண்டு நகரில் இருந்து வடமேற்கே 169 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இது ரிச்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது, மேலும் இது 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்நிலையில், நேற்று நேபாளத்தில் ரிச்டரில் 6.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில், ருகும் மேற்கு பகுதியில் 36 பேரும், ஜஜர்கோட் பகுதியில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்திற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 3 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
