நிலநடுக்கத்தால் இலங்கையில் ஏற்படவுள்ள பாதிப்பு தொடர்பில் தகவல்-செய்திச் சுருக்கம்
ஹிமாச்சல் - உத்தரகாண்ட மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
சுமார் 8 ரிக்டர் அளவுகோலில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பின் பல முக்கிய பிரதேசங்களை பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.
பொதுவாக நிலநடுக்கங்கள் எப்போது ஏற்படும் என்று கணிக்க முடியாது. ஆனால் அவை ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் ஏற்படக்கூடிய விளைவுகளை அடையாளம் காண முடியும் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
இவ்வாறு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது லங்காசிறியின் செய்திச் சுருக்கம்,