ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
புதிய இணைப்பு
கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக தலிபான் உள்துறை அமைச்சகம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கிழக்கு ஆப்கானிஸ்தானில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இதுவரை குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை
பல வீடுகளும் கட்டடங்களும் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளதாக தலிபான் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொலைதூர மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்து, மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு மனிதாபிமான அமைப்புகளை தலிபான் அரசாங்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் நிலநடுக்கம் காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள சில இடங்களுக்கு விமானம் மூலம் மட்டுமே செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



