ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மீண்டும் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை..
வடகிழக்கு ஜப்பானில் இன்று (12) காலை 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது உள்ளூர் நேரப்படி காலை 11:44 மணியளவில் அமோரி மாகாண கடற்கரையில் 20 கிலோமீட்டர் (12 மைல்) ஆழத்தில் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்றொரு வலுவான நிலநடுக்கம்
இந்நிலையில், குறித்த ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அலைகள் 1 மீட்டர் (39 அங்குலம்) வரை எழக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை, அதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டோக்கியோவின் கிழக்கே உள்ள வடக்கு ஹொக்கைடோவிலிருந்து சிபா வரையிலான பகுதி மக்களுக்கு, மற்றொரு வலுவான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்பதால், விழிப்புடன் இருக்குமாறு அரசாங்கம் சிறப்பு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam