இலங்கையில் 16 பகுதிகளில் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 16 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 06 புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
நேற்று முன்தினம் இரவு மொனராகலை - புத்தல பிரதேசத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன், ரிக்டர் அளவுகோலில் 2 அலகுகளாகவும் 4 தசமங்களாகவும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது பூமியின் மேற்பரப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் நடந்தது.
அதிர்வுகள்
நாட்டில் நிறுவப்பட்டுள்ள நான்கு நில அதிர்வு அளவீடுகளிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கடந்த காலங்களில் புத்தல மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பல தடவைகள் லேசான நில அதிர்வுகள் பதிவாகியிருந்தது.