நிலநடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டம் (Photos)
திருகோணமலையில் இடம்பெறும் நிலநடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அறிவுறுத்தியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற மாவட்ட செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களினுடைய செயலாளர்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக திருகோணமலையில் இடம்பெற்று வருகின்ற நிலநடுக்கம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டு அது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கிழக்கு பல்கலைக்கழக புவியியல் சிரேஸ்ட விரிவுரையாளர் ஆர். கிருபராஜா கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டு வருகின்ற நில நடுக்கம் தொடர்பாகவும் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் கிழக்கு ஆளுநருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார். இந்த கோரிக்கைக்கு அமையவே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எடுத்துக்காட்டாக 15.09.2018 அன்று திருகோணமலை துறைமுகத்தை அண்டியும், 19.02.2021 அன்று பாணமை கடல் பிராந்தியத்திலும், 19.03.2023 அன்று திருகோணமலை கோமரன்கடவல பகுதியிலும், 11.09.2023 அன்று மட்டக்களப்பில் இருந்து 310 கிலோ மீற்றர் தொலைவில் பதிவாகியுள்ளதுடன், அண்மையில் 12.11.2023 அன்று திருகோணமலை கோமரன்கடவல பகுதியிலும் நில நடுக்கங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri