தலைநகர் கொழும்பின் உயர்ந்த கட்டடங்களுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து
இலங்கைக்கு அருகாமையில் அமைந்துள்ள பகுதிகளில் ஏற்படும் நில அதிர்வுகளினால், தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள பாரிய கட்டடங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு தென் கிழக்குப் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நில அதிர்வு குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்…
அண்மையில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பதிவான நில அதிர்வு அநேக பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
உயரமான கட்டடங்கள் சேதமடையக் கூடிய சாத்தியங்கள்
கொழும்பிற்கு குறிப்பாக மேல் மாகாணத்திற்கு உணரப்பட்டுள்ளது.
இதன்படி தென்கிழக்கு பகுதியில் ஏற்படக்கூடிய நில அதிர்வுகளினால் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள உயர்ந்த கட்டடங்களில் தாக்கம் செலுத்தப்படக் கூடும். உயரமான கட்டடங்கள் சேதமடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றது.
எனவே பழைய புதிய கட்டடங்களை அடையாளம் கண்டு, உரிய தரத்தில் கட்டடங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளனவா என்பதனை உறுதி செய்ய பரிந்துரை செய்ய வேண்டுமென முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஆபத்தான கட்டடங்களை கறுப்பு பட்டியலிடவும், ஏனைய கட்டடங்களில் திருத்தப் பணிகளை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
