பருத்தித்துறையில் அதிகாலையில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு
பருத்தித்துறையில் 95 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருளை மினிபஸ் ஒன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை சுப்பர்மடம் மயானத்துக்கு முன்பாக இந்த கைது நடவடிக்கை இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மயானத்துக்கு முன்பாக மினிபஸ் ஒன்றில் கஞ்சாப் பொதிகளை ஏற்ற முற்பட்டபோது, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர். மற்றொரு நபர் தப்பியோடியுள்ளார்.
45 பொதிகளில் 95 கஞ்சா போதைப்பொருள் சந்தேகநபரிடம் கைப்பற்றப்பட்டது.
கடத்தலுக்குப் பயன்படுத்திய மினிபஸ்ஸும் மீட்கப்பட்டுள்ளது என்றும்
பருத்தித்துறை பொலிஸார் மேலும் கூறினர்.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam