பிறந்த குழந்தைகளை வெளியேற்றும் இஸ்ரேல்: உச்சகட்டத்தை தொட்டுள்ள தாக்குதல்கள்
காசாவின் அல்-ஷிபா வைத்தியசாலையில் இருந்து குழந்தைகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியேற்றி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான தாக்குதல் உச்சகட்டத்தை தொட்டுள்ள நிலையில், காசா நகரை முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேலிய பாதுகாப்பு படை கொண்டு வந்துள்ளது.
ஹாமஸ் அமைப்பை தாக்கும் முயற்சியில் இஸ்ரேலிய படைகள் களமிறங்கி இருப்பதால், பாடசாலைகள் , வைத்தியசாலைகள், மசூதிகள் ஆகிய அனைத்திலும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
வைத்தியசாலைகளை விட்டு வெளியேற்றம்
அந்த வகையில் தற்போது காசாவின் அல்-ஷிபா வைத்தியசாலையில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக தெரிவித்து வைத்தியசாலையை இஸ்ரேலிய இராணுவம் சுற்றி வளைத்துள்ளது.
அத்துடன் நோயாளிகளை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு படை உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக 2000 பேர் வைத்தியசாலைகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் குழந்தைகள் உட்பட தீவிர பாதிப்புகளுக்கு உள்ளான 291 நோயாளி கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அல்-ஷிபா வைத்தியசாலையில் சிக்கி தவித்த குழந்தைகளை ஐக்கிய நாடுகள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை இணைந்து வெளியேற்றியுள்ளது.
பிறந்த சில நாட்களே ஆன இந்த குழந்தைகள் சிகிச்சைக்காக எகிப்து நாட்டிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 21 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
