இலங்கையில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை..
இலங்கையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அரசியல்,மத.இனவேறுபாடுகள் வேறுபாடுகள் இல்லாத வகையில் அனைவரும் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை நேற்றையதினம்(1) ஆரம்பித்தது.
உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகரசபையின் பிரதி முதல்வர் டினேஸ்,மாநகரசபை உறுப்பினர்கள்,மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கையில் இடம்பெற்ற அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்படுவதுடன் நடமாடும் சேவைகள் மூலமும் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன.
சேகரிக்கப்படும் நிவாரணப்பொருட்கள் துரிதகதியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் முடியுமானவர்கள் தமது உதவிகளை வழங்குமாறும் மாநகரசபை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




