யானைகளின் அட்டகாசத்திற்கு நிரந்த தீர்வு கோரும் இ.சிறிநாத் எம்.பி!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் யானை, மனித மோதல், புயல் இழப்பீடு மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(19.02.2026) இடம்பெற்ற அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பிரச்சினைகள் எடுத்துரைப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
விவசாய நிலங்களை அழித்து நகரப் பகுதிகளுக்குள் யானைகள் ஊடுருவுவது தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்பட்டும் நிரந்தர தீர்வுகள் இன்னும் எட்டப்படவில்லை.
அதே போன்று, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையாக இருக்கும், 'டிட்வா' புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் சட்டவிரோத மதுபான உற்பத்தி பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், அதனைத் தடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்று, மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் முக்கிய விடயங்களை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam