ஈஸ்டர் தாக்குதலுக்கான உண்மையான சூத்திரதாரியை கண்டறிய வேண்டும்..! இ.சிறிநாத் எம்.பி கோரிக்கை

Batticaloa Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lanka Government
By Kumar Apr 22, 2026 07:20 AM GMT
Report

ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதி கிடைக்கும் பொழுது தான் எதிர்கால சந்ததியினர் நம்பிக்கையோடு இந்த நாட்டில் பயணிக்க முடியும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு இருதயபுரம் சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏழு ஆண்டுகளாகக் கிடைக்கப் பெறாத அல்லது தாமதிக்கப்பட்ட நீதியானது, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானதாக அமையும். ஆகவே, இந்த விடயத்தில் மிக முக்கியமாக, மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு இருக்கிறது.

நடுக்கடலில் மூன்று கப்பல்களை தாக்கியுள்ள ஈரான்! ஹோர்மூஸ் நீரிணையில் அதிரடி - தொடரும் பதற்றம்

நடுக்கடலில் மூன்று கப்பல்களை தாக்கியுள்ள ஈரான்! ஹோர்மூஸ் நீரிணையில் அதிரடி - தொடரும் பதற்றம்

அரசு இதற்கான செயல்பாடுகளை ஆரம்பித்திருந்தாலும் கூட, அதற்கான கால எல்லையை நிர்ணயித்து ஒவ்வொரு ஈஸ்டர் தினத்திற்கும் அந்தத் தீர்மானங்கள் அல்லது குற்றவாளிகள் கண்டறியப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், ஏழு ஆண்டுகளாக அந்த உறவுகளுக்கு அந்த நீதி கிடைக்கவில்லை.

இரக்கமற்ற செயல்

உண்மையிலே, இது அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதாபிமான ரீதியாக நோக்குகின்ற பொழுது, அந்தச் சிறுவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு கனவுகளோடு பயணித்திருந்தவர்கள், ஒரு மத வழிபாட்டுக்குச் சென்ற இடத்திலே துடிதுடித்து இறந்து போனார்கள். நானும் அந்த வைத்திய செயல்பாடுகளில் இருந்தபோது, காயப்பட்ட எத்தனையோ கடுமையான துன்பங்களை அனுபவித்தவர்களைக் கண்டிருந்தேன்.

ஈஸ்டர் தாக்குதலுக்கான உண்மையான சூத்திரதாரியை கண்டறிய வேண்டும்..! இ.சிறிநாத் எம்.பி கோரிக்கை | E Sirinath Mp Request Regarding The Easter Attacks

ஆகவே, இந்த ஒரு மனிதாபிமானமற்ற ஒரு கொடூரமான செயலுக்காகத் தண்டனை கொடுக்கப்படுவதோடு, நீதி நிலைநாட்டப்படுகின்ற பொழுதுதான் எதிர்காலத்தில் இவ்வாறான மனிதாபிமானமற்ற, அரசியலுக்காகச் செயல்படுகின்ற இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் நிறுத்தப்படும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படும் போது தான் எதிர்காலத்திலே ஒரு நேர்மையாக நடக்க வேண்டும் என்ற சிந்தனை உருவாகும். ஆகவே, இந்த விடயத்திலே சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரிக்கப்பட்டு மிக விரைவாகக் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, இந்த நீதி நிலைநாட்டப்பட்டு, இந்த மக்களுக்கான ஒரு நீதி வழங்கப்பட வேண்டும் என்று நான் இந்த அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்.

உண்மையிலேயே மிக முக்கியமான விடயம், அது இந்த நீதி தாமதிக்கப்படுகின்ற போது மக்களிடத்திலே நம்பிக்கையீனம் ஏற்படும். இதற்காக நேர்மையாகப் பயணித்தவர்கள் எல்லாம் பல இடங்களிலே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வேண்டும்..

அப்பாவிகள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிற சந்தர்ப்பங்கள், அவர்கள் குற்றவாளிகளாக்கப்படுகிற சந்தர்ப்பங்கள், பல திசைதிருப்பல்கள் கடந்த காலங்களிலே இடம்பெற்றிருக்கின்றன. இவ்வாறான நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு நீதியாக இந்த மக்களுக்கான நியாயம் இந்த நாட்டிலே கிடைக்க வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கான உண்மையான சூத்திரதாரியை கண்டறிய வேண்டும்..! இ.சிறிநாத் எம்.பி கோரிக்கை | E Sirinath Mp Request Regarding The Easter Attacks

அதற்கான செயல்பாட்டினை இந்த அரசாங்கம் விரைந்து எடுக்கப்பட வேண்டும். உண்மையாகச் செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, இன்னும் விரைவாக, இன்னும் நியாயமாக அவை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, குற்றவாளிகளுக்கு எந்தவித தயவு தாட்சண்யம் இன்றியும் இந்த நீதி அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று இந்த உறவினர்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த உயிர்த்த ஞாயிறு தினத்திலே உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான அஞ்சலிகளையும் செலுத்திக்கொண்டு, உண்மையிலே இந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் ஒரு சமய வழிபாட்டுக்காக இறைவனைப் பிரார்த்திப்பதற்குச் சென்ற வேளை ஒரு கொடூரமான, இரக்கமற்ற, தங்களுடைய சுயலாபங்களுக்காக இந்த மக்கள் இந்த நாட்டிலே பலியிடப்பட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி மிக மிக மோசமானதாகும்.

ஆகவே, இந்த விடயத்திலே நீதி நிலைநாட்டப்படுகின்ற பொழுது தான் எதிர்காலத்திலே சந்ததியினர் நம்பிக்கையோடு இந்த நாட்டிலே பயணிக்க முடியும். இது அரசியல், இன மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.  

ஈரானின் இலக்கு பட்டியல்! எண்ணெய் உற்பத்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அதிரடி அறிவிப்பு

ஈரானின் இலக்கு பட்டியல்! எண்ணெய் உற்பத்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அதிரடி அறிவிப்பு

மத்திய கிழக்கு போர்! மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் பதிவாகும் அதிரடி மாற்றம்

மத்திய கிழக்கு போர்! மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் பதிவாகும் அதிரடி மாற்றம்

YOU MAY LIKE THIS VIDEO

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US