2035இல் இலங்கையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்
2035ஆம் ஆண்டளவில் இலங்கையை ஆசியாவின் மோட்டார் வாகன விநியோகச் சங்கிலியின் கேந்திர நிலையமாக மாற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்காலத்தில் சுற்றாடல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இ-மொபைலிட்டி எனும் இலத்திரனியல் வாகனக் கொள்கையை தயாரிக்க கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அரசாங்கத்தின் நோக்கம்
இலங்கையில் மொத்தம் 26 உள்ளூர் நிறுவனங்கள் தற்போது வாகனங்களை ஒன்றிணைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இதேவேளை, 2035ஆம் ஆண்டளவில் இலங்கையை ஆசியாவின் மோட்டார் வாகன விநியோகச் சங்கிலியின் கேந்திர நிலையமாக மாற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.