பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற வர்த்தக நிலையம் (Photos)
விரைவில் சென்னை - பலாலிக்கு இடையிலான விமான சேவை அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ தெரிவித்துள்ளார்.
யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம் தீர்வையற்ற வர்த்தக நிலையம் (Duty-free) திறந்து வைக்கப்பட்டது.
இதனை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ திறந்து வைத்ததுடன், வடபிராந்திய சுங்கத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர், யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜெனரல் சந்திர சிறீ குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பலாலி விமான நிலையத்தில் தீர்வைற்ற வர்த்தக நிலையத்தினை திறந்து வைத்தமையையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். பலாலி விமானத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்காக மேலும் பல வசதிகளை ஏற்படுத்த உள்ளோம்.
ஒரே வாரத்தில் ஏழு விமான சேவைகள்
தற்போது நான்கு விமான சேவைகள் மாத்திரமே வாரத்தில் இடம்பெறுகின்றன. எதிர்வரும் காலங்களில் ஏழு விமான சேவைகள் ஒரு வாரத்தில் இடம்பெறுவதற்குரியவாறு நடவடிக்கைகளை எடுக்குமாறு எயார்லைன்ஸ் நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்
அதேபோல இரத்மலானை - பலாலிக்கிடையிலான உள்ளூர் விமான சேவையினையும் விரைவில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அத்தோடு பலாலி விமான நிலையத்தினை மேலும் விஸ்திரித்து இங்கே பயணிக்கும் பயணிகளுக்கும் மேலும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிகளை எடுத்துள்ளோம்.

வர்த்தக ரீதியில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இன்று முதலாவது தீர்வையற்ற வர்த்த நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல மேலும் பல கடைகளை இந்த அரசாங்கத்தின் அனுமதியோடு திறப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.
அதில் அழகு சாதன பொருட்கள் மற்றும் மேலும் பல பொருட்கள் அடங்கிய தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் இங்கே திறக்கப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.







புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam