அமெரிக்க வாகனங்களுக்கு வரி இல்லாத அணுகல்: இலங்கையிடம் முக்கிய கோரிக்கை
வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில், மின்சார வாகனங்கள் (EVகள்) உள்ளிட்ட அமெரிக்க வாகனங்களுக்கு வரி இல்லாத அணுகலை வழங்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் கட்டணப் பேச்சுவார்த்தைகளில் இலங்கையிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இலங்கை அரசாங்கம் முழுமையான ஒப்புதலை இதற்கு வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வரிகளைக் குறைக்கும் நோக்கத்துடன் இலங்கையும் அமெரிக்காவும் வர்த்தகப் பேச்சுவார்த்தையைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தை
சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை முதலில் முன்மொழியப்பட்ட 44 சதவீத கட்டணத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்க முடிந்தது.
தற்போதைய விகிதம் அதன் பிராந்திய போட்டியாளர்களான பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்றவற்றுடன் இணையாக இருப்பதால் போட்டித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் மீது விதிக்கப்பட்ட கட்டணங்களும் 20 சதவீதமாகவே உள்ளன. வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கான திட்டங்களில் ஒன்றாக, விலைகள் போட்டித்தன்மையுடன் இருந்தால், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எரிபொருளை வாங்க இலங்கை முன்வந்துள்ளது.
சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஏற்கனவே இலங்கையில் ஒரு விவரக்குறிப்பு சோதனைக்காக அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் WTC கச்சா எண்ணெயின் மாதிரிகளைக் கோரியுள்ளது.
தற்போது, அமெரிக்க சந்தையை அடையும் இலங்கையின் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஆடைகள் உள்ளன.
இதன்படி, ஆடைத் தொழிலுக்கு சீனாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை இலங்கை உறுதியாக எதிர்த்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா




