நெதர்லாந்து தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
நெதர்லாந்து தூதரகம் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நெதர்லாந்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாக போலி ஆளணி திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிகளில் ஏற்கனவே சிலர் சிக்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. நெதர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்படுவது போன்று போலி கடிதங்களும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெதர்லாந்து பணி வீசாக்களை வழங்கவில்லை என தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட தேர்ச்சி பெற்ற மற்றும் அதி உயர் தொழில்நுட்ப துறைகளில் மட்டுமே தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் இலங்கையர்களுக்கு எந்தவொரு தொழில் வாய்ப்பினையும் வழங்கவில்லை என தூதரகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பணம் செலுத்துவதற்கு முன்னதாக அந்த வாய்ப்பு தொடர்பில் சரியாக ஆராயுமாறு நெதர்லாந்து தூதரகம் கோரியுள்ளது.
போலியான முறையில் நெதர்லாந்தில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக அணுகும் நபர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் தூதரகம் கோரியுள்ளது.
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri